steviabanner

ஸ்டிவியா Stevia rebaudiana ரம்யா நர்சரி

சர்க்கரை துளசி  இனிப்புத் துளசி, Stevia  candyleaf, sweetleaf, sweet leaf, or sugarleaf

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்க்கரைக்கு மாற்றாக இனிப்புத் துளசி. ஸ்டீவியா ரியோடியானா


  இனிப்புத்தன்மைக்கு காரணம்சீனித்துளசியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோசைடு (Stevioside) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside)  போன்ற வேதிப்பொருட்கள். கரும்புச்சர்க்கரையைவிடபல மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மை கொண்டிருந்தாலும் மிகக்குறைந்த சர்க்கரை மற்றும் மாவுச்சத்து
கொண்டபொருட்களேஇதில் உள்ளன. சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுத்தப்படும் சீனித் துளசியில் சர்க்கரை இயற்கையாகக் காணப்படுவதால் சர்க்கரை  நோயாளிகள் இதை பயன்படுத்தலாம். இதன் இலைகளை காய வைத்துப் பொடியாக்கி டீயாக விற்கப்படுகிறது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் டீயைப்போலவே பாலில் கொதிக்க வைத்து  பயன்படுத்தலாம்.சுக்கு, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சீனித்துளசியில் வெல்லமோ, சர்க்கரையோ சேர்க்கத் தேவையில்லை.

கரும்புச் சர்க்கரை    மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்ரின், அஸ்பார்டேம் மட்டுமல்ல இயற்கைச் சர்க்கரைப் பதிலாகவும் இதைப் பயன்படுத்தலாம். டீ, காபி என்றில்லை...      குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கெட் போன்றவற்றிலும் சர்க்கரைக்குப் பதிலாக இதை பயன்படுத்தலாம். சீனித் துளசியில் ஊறுகாய், ஜாம் போன்றவையும் தயார் செய்யப்படுகின்றன. 

வளர்ப்பு  சீனித்துளசியை நாற்றுப் பண்ணைகளிலும், நர்சரிகளிலும் வாங்கி வளர்க்கலாம். மாடித்தோட்ட தொட்டியிலோ அல்லது வீட்டின் தரைதளத்தில்   உள்ள இடங்களிலோ வளர்க்கலாம். காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றவேண்டும். மண் ஈரமாகும் அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றலாம்.
மண்வகை
: சிவப்பு வண்டல் மண் சிறந்தது. மண்ணின் கார அமில தன்மை 6 முதல் 7 வரை இருக்க வேண்டும். சிறந்த வடிகால் வசதிதேவை. களிமண் பகுதிகளில் ஸ்டீவியா நன்றாக வளருவதில்லை.  காற்றின் ஈரப்பதம் 60%க்கு மேல் இருந்தால் சீனி துளசி செழித்து வளரும். சீனி துளசியில் நமக்கு தேவை இலைகளே... பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி நின்றுவிடும். எனவே பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியை கிள்ளி பூக்களை எடுத்துவிட்டால் ஸ்டீவியா செழித்து வளரும்.

சிறந்த முறையில் பராமரிக்கப்படும் சீனிதுளசி 2முதல் 3வருடம் தொடர்ந்து  மகசூல் தரும்.
அறுவடை: சீனிதுளசியில் அதன் இலைகளே நாம் பறித்து எடுக்கலாம். அல்லது கிளைகளை பூமியிலிருந்து 10 முதல் 15 செ.மீ. உயரத்தில் வெட்டி எடுத்து பின் இலைகளை பிரித்துக்கொள்ளலாம். வருடத்திற்கு 2-4 முறை அறுவடை செய்யலாம். சுமார் 10 சென்டிமீட்டர் அளவு கிளைகளை வெட்டி நட்டுபுதிய செடிகளை உருவாக்கலாம் . தண்டுப் பகுதியிலிருந்து அதன் இலைகளை நீக்கிவிட்டு 3, 4 கணுக்கள் கொண்ட தண்டுப்பகுதியை பதியம்போட்டு வேர் பிடித்தவுடன் நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.  செடிகள் கிடைக்கும் இடம  ரம்யா நர்சரி 42 தடாகம் ரோடு  TVS நகர் பஸ் ஸ்டாப்அருகில் கோயம்புத்தூர் 641025
    Plants Available at -  Ramya Nursery 42 Thadagam Road, TVS Nagar Coimbatore 641025 Mobile 8438502464.