பச்சயம் கலந்த இளந்தளிர் நாற்று உணவு வகைகள் MICROGREENS

நம் உடல் நலம் நன்கு இருக்க உணவில் காய்கள் பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். விஷ மருந்து அடிக்காத காய்கள் பழங்கள் கிடப்பது அரிது. இங்கு குறிப்பிட்ட இளந்தளிர் நாற்று உணவு வகைகள் விஷமருந்து அடிக்காத, பச்சயம் மற்றும் உயிர்ச்சத்து, நார்ச்சத்து, வைடமின் சத்து நிரைந்தவை. இவை பல நன்மை பயக்கும் குணங்களைக் கொண்டதாக நம்பப்படுகின்றது. இவற்றுக்கு மைக்ரோ க்ரீன்ஸ் என்ற பெயரும் உண்டு. இவைகளை எப்படி தயாரித்து உண்ணலாம் என்பதை கீழே காணலாம்.

பல வித விதைகளிலிருந்து இளந்தளிர் நாற்று உணவு வகைகள் தயாரிக்கலாம். உதாரணத்திற்கு வெந்தய நாற்று எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

செய்முறை 1: விதையை முளை கட்டுதல்

1. ஒரு தேக்கரண்டி வெந்தய விதையை ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரில் சுமார் 12 மணி நேரம் ஊர வைக்கவும்.

2. நீரை வடித்து விட்டு மூடி வைக்கவும். 12 மணிக்கு ஒரு தடவை நீர் தெளித்து ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

3. சுமார் 12 மணி முதல் 36 மணிக்குள் விதைகள் முளை விட ஆர்ம்பிக்கும். இது மண்ணில் விதைக்க ஏற்றதாகும்.

செய்முறை 2: முளை விட்ட விதைகளை மண்ணில் விதைத்தல்

4. ஒரு சிறிய தொட்டியில் சுமார் 2-3 அங்குல உயரத்திற்கு எரு கலந்த மண்ணை விடவும். இதில் முளை விட்ட விதைகளை சீராகத் தூவவும்.

5. விதைகள் மறையும்படி விதைகள் மேல் லேசாக மண் தூவவும்.

6. பின் தண்ணீர் தெளிப்பான் மூலம் லேசாக தண்ணீர் தெளித்து மண்ணை ஈரப்படுத்தி தொட்டியை மூடி வைக்கவும்.

7. 12 மணிக்கு ஒரு தடவை நீர் தெளித்து மண்ணை ஈரப்படுத்தி மூடி வைக்கவும்.

8. 2-3 நாட்களில் விதைகள் முளைக்க ஆர்ம்பித்ததும் லேசான வெய்யில் படும் இடத்தில் தொட்டியை மூடாமல் வைக்கவும்.

9. ஒரு நாளைக்கு 2-3 தடவை நீர் தெளித்து மண்ணை ஈரமாக வைக்கவும்.

செய்முறை 3: இளம் தளிர் நாற்றுக்கள் வளர்ச்சியும், அறுவடையும்

10. தோராயமாக 3-4 நாட்களில் நாற்றுகள் வளர ஆரம்பிக்கும். முதலில், 2 விதை இலைகள் விரிந்து பச்சையாகும்; பின்னர் மேலும் 2 நாட்களில் இரண்டு உண்மையான பச்சை இலைகள் விரியும். இந்த பருவம்தான் சாப்பிட உகந்தது.

11. இப்பொழுது 4-5 நாற்றுக்களை மண்ணுக்குமேல் கத்தரியால் நறுக்கி, நல்ல தண்ணீரில் கழுவி சாப்பிட்டுப் பார்க்கவும்.

12. உங்களுக்கு அவை நன்றாக சாப்பிடும்படி இருந்தால், தினமும் வேண்டிய அளவு நாற்றுகளை நறுக்கி, நல்ல நீரில் கழுவி பச்சையாக சாப்பிடலாம்.

13. குறைந்தது 5-6 நாட்கள் முதல் 15-16 நாட்கள் வரை இந்த இளம் தளிர் நாற்றுக்கள் சாப்பிட உகந்ததாக இருக்கும்.

14. நாற்றுக்களை அறுவடை செய்தபின், மீண்டும் வளராது. தொட்டி மண்ணை மறு சுழற்சிக்குப் பயனப்டுத்திக்கொள்ளவும்.

சில கேள்விகளும் பதில்களும்

1. எந்த வித விதைகளை பயன்படுத்துக்கூடாது: தக்காளி, கத்தரி போன்ற, விதைகளையும் மற்றும் நெல், கோதுமை, கம்பு, தினை போன்ற தானிய விதைகளையும் பயன்படுத்த வேண்டாம். தக்காளி, கத்தரி இலைகள் விஷத்தன்மை கொண்டவை.

2. எந்தந்த விதைகள் ஏற்றவை: வெந்தயம், பாசிப்பயறு, பட்டாணி, நிலக்கடலை, கொண்டக்கடலை, எள்ளு, கொள்ளு, கடுகு, முள்ளங்கி, முட்டை கோசு, பீட்ருட்டு, வெங்காயம், பூண்டு, கொத்த மல்லி, மற்றும் பல ரகங்கள் உள்ளன

3. விதைகள் எங்கு வாங்கலாம்: மளிகைக் கடைகளில், வேறு பெரிய கடைகளில் வேண்டும் விதைகளை வாங்கலாம்

3. எந்த வகை தொட்டிகளைப் பயன்படுத்தலாம்: மண், சிமெண்ட், பிளாஸ்டிக் தொட்டிகளையோ அல்லது தட்டுக்களையோ அல்லது உங்களிடம்உள்ள இன்னும் பல செடி வளர்க்க உகந்த பொருட்களை உபயோகிக்கலாம்ல்

என்ன மண் கலவை தேவை: மண் + எரு அல்லது மக்கிய உரம் அல்லது மண்புழு உரம் சேர்ந்த கலவை நல்லது. வெறும் மணல், மக்கிய தென்னை நார் கழிவு, பேப்பர் டவல் போன்றவைகளையும் பயன்படுத்தலாம்.

5. என்ன உபகரணங்கள் தேவை: தொட்டி அல்லது தட்டு, ஸ்ப்ரே பாட்டில், பூவாளி, கலவை மண் முதலியன.

6. தகுந்த இடங்கள்: பாதுகாப்பான காலை மாலை வெய்யில் படும் இடங்கள், நிழல்-வெய்யில் படும் இடங்கள், வெய்யில் படும் சன்னல் ஓரம், வராண்டா, சிட் அவுட் போன்ற இடங்கள் தேவை.

7. பருவம்: வருடம் முழுவதும் பயிரிடலாம்.

8. யார் யார் வளர்க்கலாம்: பெரியவர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பள்ளிகள், உணவகங்கள் எல்லாம் இளந்தளிர் நாற்றுக்களை வளர்த்துப் பயன் பெறலாம்.

9. எந்தெந்தெ உணவு வகைகளில் இளந்தளிர் நாற்றுக்களைச் சேர்த்து சப்பிடலாம்: உங்கள் கற்பனையே எல்லை: பச்சை கொத்த மல்லியை உணவுகளின் மேல் தூவுவது போல் எல்லா உணவுகளின் மேலும் இளந்தளிர் நாற்றுக்களைத் தூவி சப்பிடலாம். பச்சை சாலட், தயிர் பச்சடி, ஸூப் வகைகளில், நறுக்கிய பழங்களின் மேல், உப்புமா, மிக்ஸட் அரிசு உணவுகள் மேல், மேலும் மேலும்!!!

இவரங்களுக்கு: எஸ். பி. பெரியசாமி, ரம்யா நர்சரி, 42 தடாகம் சாலை, கோவை 641025. போன் : 0422-2400327.

எங்கு பச்சயம் கலந்த இளந்தளிர் நாற்றுக்களைப் பார்க்கலாம்: ரம்யா நர்சரி, 42 தடாகம் சாலை, கோவை 641025.

எச்சரிக்கை:

1. சிரிதளவு இளந்தளிர் நாற்று உணவு வகைகளை சாப்பிட்டு பின் விளைவுகள் ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்; பின் விளைவுகள் ஏதும் இல்லை என்றால் தொடர்ந்து இளந்தளிர் நாற்று உணவு வகைகளை சாப்பிட்டுப் பயன் பெறலாம்.

2. பறித்துக் கழுவிய இளந்தளிர் நாற்றுக்களை நன்கு கழுவிய டப்பாக்களில் போட்டு குளிர் சாதனப் பெட்டிகளில் 2-3 நாட்கள் வைத்து சாப்பிடலாம். மேலும் அதிக நாட்கள் வைக்கக்கூடாது.

3. இங்கே கூறிய கருத்துக்கள் ஓரளவு பொதுவானவை, வலை தளங்களில் இருந்து பெறப்பட்டு, ரம்யா நர்சரியில் முறைப்படி பரிசோதனை செய்து பார்க்கபட்டு வருகிறது.

4. தவிற்க வேண்டும்: மருந்து கலந்த விதைப்பதற்காக உள்ள விதைகளைப் பயன் படுத்தக்கூடாது. நெல், கோதுமை, கம்பு, வரகு, தினை போன்ற தானிய வகை விதைகளைப் படுத்த வேண்டாம். மேலு, தக்காளி, கத்தரி இலைகள் விஷத்தன்மை கொண்டவை ஆதலால் தக்காளி, கத்தரி விதைகளைத் தவிற்கவும்.